மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு: ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

மழை நீர் சேமிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாநகராட்சிப் பகுதியில்

மழை நீர் சேமிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்களை வீடுகள்தோறும் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
தமிழகத்தில் சென்னை உள்பட பல நகரம், கிராமங்களில் குடிநீர்ப் பிரச்னை  உருவாகி உள்ளது. தமிழகத்தில் மழை நீர் சேமிப்பு குறித்த சட்டம் கொண்டு வரப்பட்டாலும், அவற்றை  செயல்படுத்தாத காரணத்தால் தற்போது தண்ணீர் பிரச்னையில் சிக்கி தவிக்கும் நிலை உருவாகி உள்ளது.
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 50 அடி ஆழத்தில் இருந்த நீர்மட்டம் தற்போது 300 அடிக்கும் கீழே சென்று விட்டது. பல இடங்களில் ஆயிரம் அடிக்கு கீழே சென்றுவிட்டது.
இதற்கு மழை நீர் சேமிக்காததே காரணம். ஈரோட்டில் காவிரி ஆறு உள்ளதால் தண்ணீர்ப் பிரச்னையை மாநகராட்சி சமாளித்து வருகிறது. இந்நிலையில், பருவ மழை துவங்க உள்ளதால் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் சேமிக்க வேண்டும் என வலியுறுத்தி துண்டுப் பிரசுரம் அச்சடித்து ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, ஈரோடு மாநகரப் பொறியாளர் மதுரம், உதவிப் பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் கூறுகையில், ஈரோடு மாநகராட்சியில் அடுக்குமாடி குடியிருப்பு, கான்கிரீட் வீடு மற்றும் ஓட்டு வீடுகளில் எவ்வாறு மழை நீரை சேமிக்க வேண்டும் என்பது குறித்து வரைபடத்துடனும், தண்ணீர் சிக்கனம் தொடர்பான துண்டுப் பிரசுரமும் என மாநகராட்சி முழுவதும் ஒரு லட்சம் துண்டுப் பிரசுரம் அச்சடித்து வீடுகளில் ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.  
வரும் காலங்கள் பருவ மழைக் காலமாக இருப்பதால் வீடுகளில் மழை நீரை சேமிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஈரோடு மாநகர நிலப்பகுதி குறிப்பிட்ட நிலப்பகுதிக்கு கீழ் பாறைகள் அதிகம் காணப்படுவதால் தண்ணீர் உறிஞ்சுவது குறைவாக உள்ளது.
இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இருப்பினும், பவானி மற்றும் காவிரி ஆறு இருப்பதால் குடிநீர்ப் பிரச்னை இல்லை என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com