ஆப்பக்கூடல் பேரூராட்சியில் ரூ.1.31 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

ஆப்பக்கூடல் பேரூராட்சிப் பகுதியில் ரூ.1.31 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன. 

ஆப்பக்கூடல் பேரூராட்சிப் பகுதியில் ரூ.1.31 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன. 
இந்நிகழ்ச்சிகளுக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் டி.ஹேமலதா தலைமை வகித்தார். ஆப்பக்கூடல் பேரூராட்சி, மஞ்சமடை ரோடு மற்றும் கல்லங்காட்டு மேடு பகுதியில் தார் சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இச்சாலையை சீரமைக்க ரூ. 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, சாலைப்  பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தார். 
மேலும், பவானி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து காமராஜர் காலனியில் ரூ.7.50 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், காமநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் தலா ரூ.8.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடங்கள் திறக்கப்பட்டன. மேலும், குடிநீர் தேவையை போக்கும் வகையில் ரூ. 23 லட்சத்தில் தரைமட்டத் தொட்டி மற்றும் மின்மோட்டாரும் குடிநீர் வழங்கும் பணிகளும் தொடக்கிவைக்கப்பட்டன. 
பவானி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.எம்.தங்கவேலு, ஆப்பக்கூடல் பேரூர் அதிமுக செயலர் கவிவர்மன்,  பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராமச்சந்திரன், பணி ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com