கோபி பகுதியில் ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள்: அமைச்சர் தொடங்கிவைத்தார்

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.3.56 கோடி மதிப்பிலான புதிய திட்டப்

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.3.56 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.
கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட கோட்டுப்புள்ளாம்பாளையம், காமராஜ் நகர், அலங்கியம் பகுதிகளில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலைகள், கோட்டுப்புள்ளாம் பாளையம் பூதிமடைப் புதூரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் தார் சாலை, கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் அமைத்தல் ஆகிய பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்தார்.  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமிபூஜை செய்து புதிய திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை குனியமுத்தூரில் செயல்படும் தனியார் பள்ளியில் ஒரு பிரிவினருக்கு மட்டும் எல்.கே.ஜி. வகுப்புக்கு விண்ணப்பம்  விநியோகிக்கப்பட்டு வருவதாக புகார் வந்துள்ளது. முதன்மைக் கல்வி அலுவலரை அந்தப் பள்ளிக்கு  சென்று ஆய்வு செய்து அதன் விவரத்தை கடிதம் மூலமாக எனக்குத் தெரிவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களையும் சேர்க்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். ஒரு  பிரிவு மாணவரை மட்டும் சேர்க்கை என்று அறிவிப்பு வைத்திருந்தால் அது தவறு. பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் 14417 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மாணவ, மாணவிகள் தங்களது தேர்வு தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மேலும், எதிர்காலத்தில் என்ன படிக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com