ஈரோடு கிழக்குத் தொகுதியில் ரூ.51.50 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் துவக்கம்
By DIN | Published On : 04th March 2019 07:20 AM | Last Updated : 04th March 2019 07:20 AM | அ+அ அ- |

ஈரோட்டில் ரூ. 51.50 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு திட்டப் பணிகளை எம்எல்ஏக்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் சனிக்கிழமை தொடங்கிவைத்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்குள்பட்ட ஆர்கேவி சாலையில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பயன்பாட்டில் உள்ள மண் தளத்தில், எம்எல்ஏ நிதியில் இருந்து ரூ. 10 லட்சம், மாநகராட்சி நிதியில் இருந்து ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தரை தளம், வளையக்கார வீதியில், ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை, அதே பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடம் ஆகிய திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை அந்தந்தப் பகுதியில் நடைபெற்றன.
எம்எல்ஏக்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் பங்கேற்று திட்டப் பணிகளைத் துவக்கி வைத்தனர். முன்னதாக முனிசிபல் சத்திரத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்துவைத்தனர். நிகழ்ச்சியில் சூரம்பட்டி பகுதி செயலாளர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.