Enable Javscript for better performance
ரூ.7க்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்: ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு- Dinamani

சுடச்சுட

    

    ரூ.7க்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்: ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு

    By DIN  |   Published on : 11th March 2019 12:57 AM  |   அ+அ அ-   |    |  


    தனியார் பங்களிப்புடன் ரூ.7க்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. ஒரு வார்டுக்கு 1 என்ற அடிப்படையில் 60 வார்டுகளிலும் இந்த திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
    தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். அதன்படி ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் தனியார் பங்களிப்புடன் குடிநீர் வழங்கும் வகையில் சமூகநல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
    இதில் முதல்கட்டமாக வீரப்பன்சத்திரம் மண்டல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு பங்கேற்று குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்தார். 
    இதில் செயற்பொறியாளர் விஜயகுமார், முன்னாள் மண்டலக் குழு தலைவர் கேசவமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
    ஈரோடு மாநகராட்சியில் முதல் கட்டமாக வீரப்பன்சத்திரம் மண்டல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 20 லிட்டர் குடிநீர் ரூ.7க்கு வழங்கப்படுகிறது. இதற்கு ஏடிஎம் அட்டை போல டிஜிட்டல் அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை குடிநீர் வழங்கும் இயந்திரத்தில் காட்டினால் 20 லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இந்த அட்டையைப் பயன்படுத்தி தேவையான அளவுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெற்றுக்கொள்ளலாம்.  இந்த அட்டை எங்கு பெறுவது, பணம் செலுத்தும்  முறை குறித்த விரிவான விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.
     தற்போது மாநகராட்சி 1ஆவது மண்டலத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் 60 வார்டுகளிலும் செயல்படுத்தப்படும் என்றனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    BOOK_FAIR
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp