சுடச்சுட

  

  தாளவாடி அருகே  மின்மாற்றி வெடித்து தீயில் எரிந்து சேதம்

  By DIN  |   Published on : 17th March 2019 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே பீம்ராஜ்புரத்தில் மின்மாற்றி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.
  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ளது பீம்ராஜ்புரம். வனத்தையொட்டியுள்ள இக்கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ள நிலையில் பீம்ராஜ்புரம் மின்மாற்றியில் இருந்து அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வந்தது. 
  இந்நிலையில், இந்த மின்மாற்றி பயங்கர சப்தத்துடன் சனிக்கிழமை வெடித்து தீப்பிடித்தது. தீ மளமளவென கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. இதனால் அப்பகுதியில் கரும் புகைமண்டலமாகக் காட்சியளித்தது. அதைப் பார்த்த கிராம மக்கள் மின்சார வாரியத்துக்குத் தகவல் தெரிவித்தனர். 
  இதையடுத்து மின் பணியாளர்கள் உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்தனர். சுமார் ஒரு மணி நேரம் கொழுந்துவிட்டஎரிந்த தீயில் மின்மாற்றி முழுவதும் எரிந்து நாசமானது. இதனால் பீம்ராஜ்புரத்தை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்தடை ஏற்பட்டது. 
  இந்த  தீ விபத்தில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்ட வில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து மின் வாரிய ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai