தமாகா தஞ்சை தொகுதி வேட்பாளர் இன்று அறிவிப்பு: ஜி.கே.வாசன் பேட்டி

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் திங்கள்கிழமை அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் திங்கள்கிழமை அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 
 இது குறித்து ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 அதிமுக கூட்டணி என்பது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் முன்னேற்றம், தமிழகத்தின் வளர்ச்சிக்கான கூட்டணி ஆகும். மக்களுடைய நம்பிக்கையைப் பெற்ற கூட்டணியை நாங்கள் கட்டமைத்துள்ளோம். இதனால் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.
 வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்ற அடிப்படையில் கூட்டணி அமைத்து உள்ளோம். இதன் அடிப்படையிலேயே எங்களது தேர்தல் அறிக்கை இருக்கும். தமாகா சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் திங்கள்கிழமை அறிவிக்கப்பட உள்ளார். அந்த வேட்பாளர் அந்தத் தொகுதியின் வாக்காளராகவும், தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவராகவும் இருப்பார். 
 எண்ணிக்கை அடிப்படையில் கூட்டணி அமைக்காமல், நல்ல எண்ணத்தின் அடிப்படையில் கூட்டணி அமைத்துள்ளோம். தமிழகத்தில் தஞ்சாவூர் தொகுதி தவிர 38 தொகுதி வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் எங்கள் கட்சித் தலைவர்கள் பாடுபடுவார்கள். 
 தமாகா கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் நீதிமன்றத்தை அணுகி  முதற்கட்டமாக சைக்கிள் சின்னத்தைப் பெறுவதில் வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை நாங்கள் அணுகி சைக்கிள் சின்னம் பெற வலியுறுத்துவோம்.
 இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் நல்ல முடிவு எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.  அப்படி சைக்கிள் சின்னம் கிடைக்காத பட்சத்தில் தஞ்சாவூர் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெறுவோம்.
 தேர்தல் சோதனை என்ற பெயரில் சிறு, குறு வியாபாரிகள், தொழிலதிபர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
 பேட்டியின்போது கட்சியின் பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com