Enable Javscript for better performance
அம்மாபேட்டை அருகே தீ விபத்தில் வைக்கோல் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    பவானி அருகே வீட்டின் முன்பாக உலர் தீவனத்துக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போர் தீப்பிடித்து புதன்கிழமை சேதமடைந்தது. 
    அம்மாபேட்டை அருகேயுள்ள சிங்கம்பேட்டை மொண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி மனைவி ஜெயாம்மாள். விவசாயி. 
    இவர், கால்நடைகளின் தீவனத்துக்காக சுமார் மூன்றரை ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்யப்பட்ட நெல், வைக்கோலை வாங்கி வீட்டின் முன்பு அடுக்கி வைத்திருந்தார். 
    இந்நிலையில்,  எதிர்பாராமல் வைக்கோல் போரில் புதன்கிழமை தீப்பிடித்துள்ளது. வைக்கோல் நன்கு உலர்ந்திருந்ததால் தீக் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. 
    தகவலின்பேரில் அங்கு வந்த பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தி தலைமையிலான தீயணைப்புப் படையினர் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாகப் போராடி தீயை அணைத்தனர். இதில், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து சேதமானது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai