Enable Javscript for better performance
ஈரோடு தொகுதியில் 21 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் உள்பட 21 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 8 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 
    ஈரோடு மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. முதல் 3 நாள்கள் வேட்பு மனு தாக்கல் இல்லை. கடந்த 22 ஆம் தேதி 5 பேர், 25 ஆம் தேதி 11 பேர், 26 ஆம் தேதி 13 பேர் என மொத்தம் 29 பேர், 34 மனுக்களை தாக்கல் செய்தனர்.
    மாவட்ட தேர்தல் அதிகாரி சி.கதிரவன் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை புதன்கிழமை காலை நடைபெற்றது. தேர்தல் பொதுப் பார்வையாளர் மாணிக் குர்ஷில்,  மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, கோட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
    பரிசீலனையின்போது வேட்பு மனு தாக்கல் செய்தோர், அவரை முன் மொழிபவர், மேலும் இருவர் என தலா நால்வர் அனுமதிக்கப்பட்டனர். வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்களைக் குறிப்பிட்டும், அதில் தவறு ஏதும் இல்லை என்ற விவரத்தை தெரிவித்தும் மனு ஏற்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அதிகாரி சி.கதிரவன் அறிவித்தார். மொத்தமுள்ள 34 மனுவில் மாற்று வேட்பாளர் கூடுதலாக தாக்கலான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 21 மனுக்கள் ஏற்கப்பட்டன. 
    இதன்படி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் எம்.கோபால், அதிமுக வேட்பாளர் ஜி.மணிமாறன், திமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கே.சீதாலட்சுமி,  மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஏ.சரவணகுமார், அமமுக வேட்பாளர் கே.சி.செந்தில்குமார், அக்கட்சியின் மாற்று வேட்பாளர் சி.சண்முகவேலு ஆகியோர் மனுக்கள் ஏற்கப்பட்டன. 
    இதேபோல சுயேட்சை வேட்பாளர்களான ஏ.அருணாசலம், பி.சித்ரா, சி.கணேசமூர்த்தி,  கே.சுப்பிரமணியன், எம்.கணேசமூர்த்தி, என்.பரமசிவம், பி.கார்த்திகேயன், பி.குப்புசாமி, எஸ்.தர்மலிங்கம், எஸ்.ஆனந்தி, ஏ.நடராஜன், ஏ.கதிர்வேல், ஆர்.குப்புசாமி, ஏ.மணி ஆகியோர் மனுக்கள் ஏற்கப்பட்டன. 
    வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாள்கள் வேட்பு மனுக்களை திரும்பபெற படிவத்தை தாக்கல் செய்யலாம்.  மாலை 3 மணிக்கு மேல் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னத்துடன் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai