Enable Javscript for better performance
ஈரோடு-பாலக்காடு பயணிகள் ரயிலை தொடர்ந்து இயக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு-பாலக்காடு பயணிகள் ரயிலை தொடர்ந்து இயக்க கோரிக்கை

    By DIN  |   Published on : 28th March 2019 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோட்டில் இருந்து பாலக்காடு வரை செல்லும் பயணிகள் ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
    இதுகுறித்து தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் கே.என்.பாஷா அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: 
    ஈரோட்டில் இருந்து பாலக்காடு வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. திருப்பூர், கோவை மார்க்கமாக காலை 7.40 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயிலில் திருப்பூருக்கு ரூ.15, கோவைக்கு ரூ.25, பாலக்காடு டவுனுக்கு ரூ. 35 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  ஆனால் ஈரோடு-திருப்பூருக்கு பேருந்து கட்டணம் ரூ. 49.  கோவைக்கு சாதாரண பேருந்து கட்டணம் ரூ.83, விரைவு பேருந்து கட்டணம், ரூ.93, பாலக்காடு வரை செல்ல ரூ.150 கட்டணமாகும். மறு மார்க்கமாக பாலக்காட்டில் இருந்து கோவை, திருப்பூர் மார்க்கமாக ஈரோடு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்பெறுகின்றனர்.
     ஈரோட்டில் இருந்து திருப்பூர், கோவைக்கு வேலைக்கு செல்லும் பயணிகளுக்கு, இந்த ரயில் வசதியாக இருந்தது. நீண்ட காலமாக இந்த ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு இந்த ரயிலை நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளது.
     ரயில்வே நிர்வாகத்துக்கு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் இந்த ரயிலை, நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஈரோட்டில் இருந்து திருப்பூர், கோவைக்கு சென்று பயின்று வரும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே, இந்த ரயிலை நிறுத்தும் முடிவை கைவிட வேண்டும். தொடர்ந்து ரயில் இயக்கத்துக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai