Enable Javscript for better performance
ஈரோட்டில் விவசாயிகள் சார்பில் ஏப்ரல் 7 இல் விவாத மேடை- Dinamani

சுடச்சுட

    

    மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்காக விளைநிலத்தை இழந்த விவசாயிகள் சார்பில் "கோரிக்கை விவாத மேடை' நிகழ்ச்சி ஈரோட்டில் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
    உயர் மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டியக்கம், தமிழக விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்புக் குழு, கெயில் எரிவாயு குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பு, பாரத் பெட்ரோலியத்தின் எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பு, அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு உள்பட மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்காக விளைநிலத்தை இழந்த விவசாயிகள் சார்பில் "கோரிக்கை விவாத மேடை' நிகழ்ச்சி ஈரோட்டில் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. 
    ஈரோடு ஏஈடி பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ள விவாத மேடையில், திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். 
    விவாதத்தில் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளிடமிருந்து நிலத்தை வலுக்கட்டாயமாக பறிக்கும் நடவடிக்கைக்குப் பதிலாக நிலத்தை பாதுகாக்கும் வகையில் நம்பகமான செயல் திட்டங்களை முன் வைக்கும் அரசியல் கூட்டணியை தேர்தலில் ஆதரிப்பது என விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai