கல்லூரி மாணவி மாயம்
By DIN | Published On : 28th March 2019 09:27 AM | Last Updated : 28th March 2019 09:27 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில், நர்ஸிங் படித்து வந்த மாணவி விடுதியில் இருந்து மாயமான சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காசிபாளையத்தைச் சேர்ந்த சிவராஜ் மகள் உமாதேவி (20). இவர், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு நர்ஸிங் படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்தார். இந்நிலையில் அவர், திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் பயிற்சிக்கு சென்று விட்டு திங்கள்கிழமை மதியம் விடுதிக்கு வந்துள்ளார்.
பின்னர், வார்டன், கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் அனுமதி பெறாமல் அவர் வெளியே சென்றாராம். அவர் மீண்டும் விடுதிக்கு வராததால் பெருந்துறை போலீஸில் கல்லூரி முதல்வர் மனோண்மணி செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.