Enable Javscript for better performance
காலிங்கராயன் வாய்க்காலில் மிதந்த பெண், 2 குழந்தைகள் உடல்கள் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    காலிங்கராயன் வாய்க்காலில் மிதந்த பெண், 2 குழந்தைகள் உடல்கள் மீட்பு

    By DIN  |   Published on : 28th March 2019 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காலிங்கராயன் வாய்க்காலில் மிதந்த பெண் மற்றும் 2 பெண் குழந்தைகளின் உடல்களை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ஈரோடு அருகே குப்பிபாளையம் பகுதியில் காலிங்கராயன் வாய்க்கால் கரையோரமாக விவசாயி ஒருவர் புதன்கிழமை நடந்து சென்றுள்ளார். அப்போது இறந்த நிலையில் 3 உடல்கள் வாய்க்கால் கரையோரமாக உள்ள முள்புதரில் சிக்கி மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்து ஈரோடு டவுன் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார். 
     சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், ஒரே துணியால் கட்டப்பட்டிருந்த பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்களை மீட்டனர். பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
      இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது:  வாய்க்காலில் இருந்து பெண் மற்றும் 2 பெண் குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. ஒரு குழந்தைக்கு 10 வயதும், மற்றொரு குழந்தைக்கு 7 வயதும் இருக்கும். பெண்ணுக்கு 30 முதல் 35 வயது வரை இருக்கலாம்.  தாய் தனது 2 மகள்களை உடலில் கட்டிக்கொண்டு வாய்க்காலில் குதித்து இறந்திருக்கலாம் எனக் கருதுகிறோம். கருங்கல்பாளையம், பள்ளிபாளையம், பவானி காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்து ஏதேனும் புகார் வந்துள்ளதா என்று கேட்டுள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai