Enable Javscript for better performance
குடிநீர் வழங்கக் கோரி  பொதுமக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    அந்தியூர் அருகே தடையின்றி குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். 
    வெள்ளித்திருப்பூர் பகுதியில் கடந்த 10 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 
    இதுகுறித்து, அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கோபமடைந்த பொதுமக்கள் வெள்ளிதிருப்பூர் - அந்தியூர் சாலை பிரிவில் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த வெள்ளிதிருப்பூர் போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, விரைவில் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai