Enable Javscript for better performance
தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது: உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது: உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

    By DIN  |   Published on : 28th March 2019 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
    திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து பெருந்துறையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
    பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
    தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலையை காணமுடிகிறது. கடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது கருப்பு பணத்தை மீட்டெடுத்து, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடப்படும் என்று மோடி  வாக்குறுதி அளித்தார். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 150- க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஜி.எஸ்.டி. வரியால் வியாபாரிகள் வீதிக்கு வந்துள்ளனர். ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலை தருவதாக சொன்ன பிரதமர் மோடி, அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நீட் தேர்வு ரத்து, கல்வி மற்றும் விவசாய கடன்கள் ரத்து, இலவச ரயில் பாஸ் போன்றவை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன என்றார்.
    இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன்,  ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி.ராஜன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    இதைத் தொடர்ந்து அவர் ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை ஆதரித்து ஈரோடு கனிராவுத்தர் குளம், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் பிரசாரம் செய்தார். 
     ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில் அவர் பேசியதாவது: 
    தமிழகத்தில் எங்கு சென்றாலும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலையைக் காண முடிகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 400 ஆக இருந்த சமையல் எரிவாயு உருளை விலை இப்போது 1,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.  பொள்ளாச்சியில் நிகழ்ந்த சம்பவங்களே இதற்கு சாட்சிஎன்றார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai