நீலகிரி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

நீலகிரி மக்களவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் அறிமுக கூட்டம் சத்தியமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

நீலகிரி மக்களவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் அறிமுக கூட்டம் சத்தியமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இதில் கலந்துகொண்ட வேட்பாளர் ராமசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
நீலகிரி மக்களவைத் தொகுதியில் படுகர் இன மக்களுக்கு எஸ்சி எஸ்டி பிரிவு சலுகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பச்சை தேயிலை விலை கிலோ ரூ. 30 வரை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் இத்திட்டத்தை கொண்டு வந்து பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பவானிசாகர் பகுதியில் கமலா ஆரஞ்சு விளைவிப்பதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை உள்ளதால் தோட்டக்கலைத் துறை மூலம் கமலா ஆரஞ்சு சாகுபடி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com