நந்தா பொறியியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் அண்மையில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் அண்மையில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரியின் பொறியியல், தொழில்நுட்பவியல், மேலாண்மைத் துறைகளின் சார்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கிற்கு ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர் என்.ரங்கராஜன் முன்னிலை வகித்தார். 
மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பவியல் துறை விஞ்ஞானி வி.என்.மணி, மலேசியாவின் ஆசிய பசிபிக் தொழில்நுட்ப பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் கீதா ரூபசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நந்தா கல்வி நிறுவனங்களின் ஆலோசகர் எஸ்.பி. விஸ்வநாதன், முதன்மை கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.  
இதில், சமர்ப்பிக்கப்பட்ட 550 ஆராய்ச்சி கட்டுரைகளில் 406 தேர்தெடுக்கப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்கு மலரினை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர்.
முன்னதாக கல்லூரியின் ஆராய்ச்சி, வளர்ச்சித் துறை தலைவர் சி.என்.மாரிமுத்து வரவேற்றார். முடிவில் இயந்திரவியல் துறைத் தலைவர் எம்.ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com