"பூஞ்சாணம் மூலம் அமெரிக்கன் புழுவைக் கட்டுப்படுத்தலாம்'

பூஞ்சாணம் மூலம் அமெரிக்கன் புழுவைக் கட்டுப்படுத்த முடியும் என வேளாண்மைத் துறையினர் தெரிவித்துள்ளனர். 

பூஞ்சாணம் மூலம் அமெரிக்கன் புழுவைக் கட்டுப்படுத்த முடியும் என வேளாண்மைத் துறையினர் தெரிவித்துள்ளனர். 
கோபி அருகே உள்ள மைராடா வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேளாண் களப் பணியாளர்கள் மற்றும் இடுபொருள் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பை கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைதம்பி கூறியதாவது: 
அமெரிக்காவில் இருந்து பரவிய இந்தப் படைப் புழுவானது மக்காச்சோளம் மட்டுமின்றி நெல், கரும்பு, சோளம் உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட பயிர்களைத் தாக்குகிறது. 30 முதல் 90 நாள்கள் வரை ஆயுள் கொண்ட இந்தப் புழுக்கள் ஒரேநேரத்தில் 200 முட்டைகள் வரை இடும்.
வெயில் நேரத்தில் பயிர் குருத்திலும், மண்ணுக்குள்ளும் சென்று பதுங்கிக் கொள்வதால் இந்தப் புழுக்களை எளிதில் கட்டுப்படுத்த முடிவதில்லை. மருந்துச் செலவைக் குறைக்கவும், சிறப்பாக புழுக்களைக் கட்டுப்படுத்தவும் மெட்டாரைசியம் என்ற பூஞ்சாணத்தைத் தெளிக்கலாம்.
மேலும், பிவேரியா பேசியானா என்ற பூஞ்சாணத்தை விதையுடன் கலந்து விதைப்பதாலும் இந்தப் புழுவைக் கட்டுப்படுத்த முடியும் என்றார். 
மைராடா வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் அழகேசன் பேசுகையில், படைப் புழுவை அனைவரும் ஒருங்கிணைந்து கட்டப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார். 
பூச்சியியல் விஞ்ஞானி சீனிவாசன் பேசுகையில், படைப் புழுவின் வாழ்க்கை முறை, பல்வேறு மாநிலங்களில் இதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு ஆகியவை குறித்து விளக்கினார்.
கூகலூர் வேளாண்மை அலுவலர் பவானி, மண்வள அட்டை பரிந்துரைப்படி உரங்களைப் பயன்படுத்துவது குறித்தும், மண்மாதிரி எடுப்பது குறித்தும் விளக்கி பேசினார். 
இந்தப் பயிற்சி வகுப்பில்,  கோபி வட்டார வேளாண்மைத் துறை அலுவலர்கள், உரம், பூச்சி மருந்து விற்பனையாளர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க செயலாளர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். 
வட்டார தொழில் நுட்ப மேலாளர் அரவிந்தன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com