Enable Javscript for better performance
25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: அதிகாரிகள் கண்காணிக்க வலியுறுத்தல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: அதிகாரிகள் கண்காணிக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published On : 02nd May 2019 08:18 AM  |   Last Updated : 02nd May 2019 08:18 AM  |  அ+அ அ-  |  

    கட்டாயக் கல்வி சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் நெறிமுறை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    மத்திய அரசின் கட்டாயக் கல்வி சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை, எளிய குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய அரசே செலுத்தும். 
    ஆனால், ஈரோடு மாவட்டத்தில் கடந்த காலங்களில் இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மத்திய அரசு கல்விக் கட்டணம் சலுகை வழங்குவதில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளதால் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் தயக்கம் காட்டும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
    கடந்த காலங்களில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையும், மாவட்டத்தில் உள்ள பல தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா? என்பதை முறையாக கண்காணிக்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. 
    இதனால் பல பள்ளிகளில் விதிமுறைப்படி 25 சதவீத இடஒதுக்கீடு வழங்காத போதிலும் பள்ளிக் கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது, இந்தக் கல்வி ஆண்டில் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
    இதுகுறித்து ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சி.சதாசிவம் கூறியதாவது, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த கல்வித் துறை அதிகாரிகள், இந்த இடஒதுக்கீட்டின் படி எத்தனை இடங்கள் உள்ளன என்பது குறித்த தகவல்களை தெரிவிக்க மறுக்கின்றனர்.   
    பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை தொடங்கிவிட்ட நிலையில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கட்டாயக் கல்வி சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டை தனியார் பள்ளிகள் முறையாக அமல்படுத்துவதை முறையாக கண்காணித்து அனைத்து இடங்களும் ஏழை, எளிய குழந்தைகளால் நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp