பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுநர் கைது
By DIN | Published On : 05th May 2019 03:41 AM | Last Updated : 05th May 2019 03:41 AM | அ+அ அ- |

சென்னிமலை அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை, கொளத்துப்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராமு(32). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் காலை, மாலை நேரங்களில் மாணவ, மாணவிகளை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தார்.
அப்போது இவரது ஆட்டோவில் பயணிக்கும் ஈரோட்டை சேர்ந்த 8 ஆம் வகுப்பு மாணவியிடம் பழகி வந்தார்.
இந்த பழக்கத்தின் மூலமாக சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில் பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்த சிறுமியை பார்க்க ராமு சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். எதிர்பாராதவிதமாக சிறுமியின் பெற்றோர் இச்சம்பவத்தை பார்த்துவிட, ராமு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, ராமுவை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து போலீஸார் அவர் மீது போக்úஸா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை கோபி கிளை சிறையில் அடைத்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...