சுட்டெரிக்கும் கத்திரி வெயில்: மக்கள் கடும் அவதி

ஈரோட்டில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 


ஈரோட்டில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பாகவே ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே பொதுமக்களை வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியது. அப்போதே, இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோல், கடந்த 3 மாதங்களாக ஈரோட்டில் வெயிலின் தாக்கமும் எதிர்பார்த்ததை விட கடுமையாகவே காணப்பட்டது. கடந்த சில நாள்களாக 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தியது. ஒரு சில நாள்களில் மாலை, இரவு வேளைகளில் கோடை மழை பெய்தாலும், மறுநாள் வெயிலின் தாக்கம் வழக்கம்போல காணப்பட்டது.
அக்னி நட்சத்திரத்தின்போது வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. தற்போது, சுட்டெரிக்கும் கத்திரி வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 
ஈரோட்டில் வெயிலின் தாக்கத்தால் சாலையில் நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்ள பெண்கள் பலர் குடைகளைப் பிடித்தபடியும், சேலை, துப்பட்டாவால் தலையில் போர்த்திய படியும் செல்கின்றனர்.
இதேபோல், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது முகத்தில் அனல் காற்று வீசிவதை உணர முடிகிறது. காலை 10 மணியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், நேரம் செல்ல செல்ல வெப்பத்தின் தன்மை மேலும் அதிகரிக்கிறது. 
பிற்பகல் நேரத்தில் பெரும்பாலான தெருக்கள் வெறிச்சோடியே காணப்படுகிறது. வெயிலில் சாலையோரங்களில் உள்ள இளநீர், கரும்புச்சாறு, குளிர்பானங்கள், பழச்சாறு கடைகள், ஐஸ்கிரீம் கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. 
ஈரோடு மாநகரில் ஆங்காங்கே மின் தடையும் ஏற்படுவதால் மக்களின் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே கத்திரி வெயிலை எதிர்கொள்ள உள்ள மக்கள், கோடை மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com