விளையாட்டு வீராங்கனைகளுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை

விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா கோபி கலை, அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா கோபி கலை, அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேசிய அளவில் சாதனை புரிந்த 10 விளையாட்டு வீராங்கனைகளுக்கு, அவர்களுடைய மூன்று ஆண்டு கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணங்களை நிசப்தம் அறக்கட்டளை ஏற்றுக் கொண்டு அதற்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா கோபி கலை, அறிவியல் கல்லூரிச் செயலர் மற்றும் தாளாளர் எம்.தரணீதரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வீ.தியாகராசு வரவேற்றார். கோபி நிசப்தம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் எழுத்தாளர் மணிகண்டன்  நிகழ்வின் திட்ட உரையையும், சாதனை புரிந்த வீராங்களைகளுக்கு முதல் ஆண்டுக்கான ஊக்கத்தொகையாக ரூ.5.20 லட்சத்துக்கான காசோலையை கல்லூரிச் செயலர் மற்றும் தாளாளர் எம்.தரணீதரனிடம் வழங்கினார்.     
இந்நிகழ்வில் கல்லூரி முதன்மையர் ஆர்.செல்லப்பன், கல்லூரிஆட்சிக்குழு உறுப்பினர் எம்.திவாகரன், தமிழ்நாடு பனியன் உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் முத்துரத்தினம், கோபிபாளையம் பள்ளித் தலைமையாசிரியர் அரசுதாமஸ், கோபி ரோட்டரி சங்கத் தலைவர் வெங்கடசுப்பிரமணியம், கோபி பசுமை இயக்கத் தலைவர் ச.கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
கல்லூரி உடற்கல்வி இயக்குநர் எம்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை  நிசப்தம் அறக்கட்டளை உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com