Enable Javscript for better performance
நடப்பாண்டிலும் குறையாத மவுசு: கலைக் கல்லூரிகளில் 70 சதவீதம் மாணவர் சேர்க்கை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    நடப்பாண்டிலும் குறையாத மவுசு: கலைக் கல்லூரிகளில் 70 சதவீதம் மாணவர் சேர்க்கை

    By DIN  |   Published On : 15th May 2019 07:29 AM  |   Last Updated : 15th May 2019 07:29 AM  |  அ+அ அ-  |  

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் 70 சதவீதம் அளவுக்கு மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.  
    அரசு, உதவிபெறும் கல்லூரிகளில் இன்னும் கலந்தாய்வு முடிவடையாத நிலையில் இந்த ஆண்டில் மாணவர் சேர்க்கை 100 சதவீதத்தை எட்ட வாய்ப்புள்ளது என கல்லூரிப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
    பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த மாதம் 19 ஆம் தேதி வெளியானதைத் தொடர்ந்து மாணவர்கள் உயர் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.  
    பொறியியல் படிப்புக்கு கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் இடையே வரவேற்பு இல்லை. பி.இ., பி.டெக் முடித்த லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலையில்லாமல் அலைந்து திரிகிறார்கள்.பொறியியல் படிப்பு மீது இருந்த மோகம் படிப்படியாக குறைந்து விட்டது.பல லட்சம் செலவு செய்து 4 ஆண்டுகள் பொறியியல் படித்து முடித்தாலும் அதற்கான வேலையோ, ஊதியமோ கிடைக்காததால் பொறியியல் படிப்புக்கு பதிலாக கலை, அறிவியல் கல்லூரிகள் பக்கம் மாணவர்கள் நாடிச் செல்கின்றனர்.  ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்து போட்டித் தேர்வு எழுதி அரசு வேலைக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான மாணவர்கள் பி.ஏ, பி.காம், பி.எஸ்சி. போன்ற படிப்புகளைத் தேர்வு செய்கின்றனர். 
     டி.என்.பி.எஸ்.சி., ரயில்வே, வங்கி உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் அடிப்படை கல்வித் தகுதி பட்டப் படிப்பாகும். அதனால் இன்றைய மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விரும்புகின்றனர்.
    70 சதவீதம் மாணவர் சேர்க்கை:   ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலத்தில் அரசு கலைக் கல்லூரி, எழுமாத்தூரில் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மற்றும் உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள் என மொத்தம் 26 கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் முதல் ஆண்டில் 20,000 மாணவர்களை சேர்க்க முடியும். இந்தக் கல்லூரிகளில் இதுவரை ஏறத்தாழ 70 சதவீதம் அளவுக்கு மாணவர்கள் சேர்ந்துள்ளதாக கல்லூரி பேராசிரியர்கள் சிலர் தெரிவித்தனர். 
     இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: 
    கடந்த 5 ஆண்டுகளைப்போலவே நடப்பு ஆண்டிலும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.  அரசுக் கல்லூரிகள்,  பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் உதவிபெறும் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்தக் கல்லூரிகளில் கலந்தாய்வு தொடங்கிவிட்டாலும் இன்னும் முழுமையாக  முடிவடையவில்லை. சுயநிதிக் கல்லூரிகளில் ஒரு சில புகழ்வாய்ந்த கல்லூரிகள் பெரும்பாலான பாடப் பிரிவுகளுக்கு கடந்த ஜனவரி மாதமே மாணவர் சேர்க்கையை முடித்துவிட்டன ( கல்வி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.60,000 முதல் ரூ.1 லட்சம் வரை வசூலிக்கும் கல்லூரிகள்).  பிற கல்லூரிகளில் இப்போது வரை 50 முதல் 70 சதவீதம் வரை மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஜூன் மாத கடைசிக்குள்ளாக சுயநிதிக் கல்லூரிகளில் 90 சதவீதம் வரையும், அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரிகளில் 100 சதவீதம் வரை மாணவர் சேர்க்கை இருக்கும் என்று நம்புகிறோம்.     இந்த ஆண்டில் மாணவர்கள் இடையே பி.ஏ. ஆங்கிலம், பி.காம்(பொது)பட்டப் படிப்புக்கு அதிக மோகம் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வில் 500 மதிப்பெண்ணுக்குமேல் எடுத்த மாணவ, மாணவிகள் கூட கலைக் கல்லூரிகளில் பி.காம். படிக்கவே விரும்புகின்றனர் என்றனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp