கோபி அருகே வெடிமருந்தை கடித்த பசு மாடு காயம்

கோபி அருகே காளியூர் வனத்தையொட்டி உள்ள பகுதிகளில் சமூக விரோதிகளால் வன விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தும்

கோபி அருகே காளியூர் வனத்தையொட்டி உள்ள பகுதிகளில் சமூக விரோதிகளால் வன விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தும் வாய் வெடி மருந்தில் சிக்கி பசு மாடு பலத்த காயமடைந்தது. 
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வன சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாட சமூக விரோத கும்பல்கள் வாய் வெடி என்னும் வெடிமருத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வெடி மருந்தை வனத்தையொட்டியுள்ள பகுதிகளில் வைத்தால் அதைக் கடிக்கும் வன விலங்குகள் வெடியில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. அதனால் இந்த வெடியை அதிக அளவு பயன்படுத்தி சமூக விரோத கும்பல் வன விலங்குகளை வேட்டியாடி வருகின்றன. 
இந்நிலையில், டி.என்.பாளையம் வன சரகத்துக்குள்பட்ட காளியூர் பகுதியில் வசிக்கும் விவசாயி அம்மாசை என்பவர் தனது கால்நடைகளை வனப் பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். இதில் ஒரு பசுமாடு அங்கு சமூக விரோத கும்பலால் வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த வெடிமருந்தை கடித்துள்ளது. அப்போது வெடி மருந்து வெடித்ததில் பசுமாட்டின் வாய் மற்றும் முகம் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயி அம்மாசை, அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அழைத்து மாட்டுக்கு சிகிச்சை அளிக்க முற்பட்டார். ஆனால் சிகிச்சை அளித்தும் பயனில்லை என்று மருத்துவர் கூறியதால் விவசாயி வேதனையடைந்துள்ளார். 
இதுபோன்று இப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் நாய்கள் இந்த வெடியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த வெடிமருந்தை பயன்படுத்தும் சமூக விரோதக் கும்பலை வனத் துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com