முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
இளம்பெண் கொலை
By DIN | Published On : 18th May 2019 06:35 AM | Last Updated : 18th May 2019 06:35 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம் அருகே சாலையில் நடந்து சென்ற இளம் பெண்ணை கழுத்து அறுத்துக் கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், இவரது மனைவி லட்சுமி (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பணி முடிந்து நிறுவனத்தின் வாகனத்தில் வந்து சிக்கரசம்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் லட்சுமியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் லட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத் தகராறு அல்லாது வேறு காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.