தீ விபத்தில் குடிசை சேதம்
By DIN | Published On : 20th May 2019 06:49 AM | Last Updated : 20th May 2019 06:49 AM | அ+அ அ- |

சென்னிமலை அருகே, குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
சென்னிமலையை அடுத்த, தொட்டம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (50). நெசவுத் தொழிலாளி. இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு சொந்தமான ஓலைக்குடிசையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தீப்பிடித்தது.
இதைக் கண்ட மற்றொரு குடிசையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் தீயை அணைக்க முயன்றனர். பின்னர், சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைப்பதற்குள் வீட்டில் இருந்த துணிகள், வீட்டு உபயோக பொருள்கள் ஆகியவை தீயில் எரிந்து சேதமாகின.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சேதம் குறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, சென்னிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.