Enable Javscript for better performance
கைத்தறித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    கைத்தறித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

    By DIN  |   Published on : 05th November 2019 10:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கைத்தறி, துணி நூல் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை மாலை சோதனை நடத்தினா். இதில், கணக்கில் வராத ரூ. 18.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.

    ஈரோடு - பவானி சாலை, அசோகபுரத்தில் உள்ள கைத்தறி, துணி நூல் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை மாலை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

    இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 18.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாலை 5 மணிக்குத் தொடங்கிய சோதனை இரவு 9 மணிக்குப் பிறகும் நீடித்தது. மேலும், இதுபோல் ஈரோட்டில் மேலும் 2 கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களிலும் இந்த சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai