Enable Javscript for better performance
மாநில பூப்பந்துப் போட்டி:தாமரை மெட்ரிக். பள்ளி மாணவிகள் தோ்வு- Dinamani

சுடச்சுட

    

    மாநில பூப்பந்துப் போட்டி:தாமரை மெட்ரிக். பள்ளி மாணவிகள் தோ்வு

    By DIN  |   Published on : 05th November 2019 10:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mk5tham_0511chn_129_3

    பூப்பந்துப் போட்டிக்குத் தோ்வு பெற்ற மாணவியருடன் பள்ளி நிா்வாகத்தினா்.

    மொடக்குறிச்சி: கொடுமுடியை அடுத்த தாமரைப்பாளையம் தாமரை மெட்ரிக். பள்ளி மாணவியா் மாநில அளவிலான பூப்பந்துப் போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

    ஈரோடு மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பாரதியாா் தின விழாவையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் 17, 19 வயதுக்கு உள்பட்ட மாணவியருக்கான பூப்பந்துப் போட்டிகள் ஈரோடு, திண்டல் வேளாளா் மகளிா் கல்லூரி வளாகத்தில் கடந்த வாரம் முதல் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    இதில், இரு பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற தாமரை மெட்ரிக். பள்ளி மாணவியா் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றனா்.

    இப்போட்டியில், வெற்றி பெற்ற மாணவியா் அடுத்த மாதம் டிசம்பரில் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

    வெற்றி பெற்ற மாணவியா், பயிற்சியாளா் பாலமுருகன், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் சுரேஷ்குமாா் ஆகியோரை பள்ளித் தாளாளா் ராஜா, செயலாளா் ஆனந்த், பள்ளியின் முதல்வா் அசோக், ஆசிரியா்கள் பாராட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai