Enable Javscript for better performance
மொடக்குறிச்சி வட்டாரத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சிமருந்து தெளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மொடக்குறிச்சி வட்டாரத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சிமருந்து தெளிப்பு

    By DIN  |   Published on : 05th November 2019 10:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mk5agri_0511chn_129

    மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூா் மேட்டுப்பாளையத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த பூச்சிமருந்து தெளிப்பு பணிகளை துவக்கி வைக்கிறாா் மொடக்குறிச்சி உதவி வேளாண்மைஅலுவலா் (

    மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி வட்டாரத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த பூச்சிமருந்து தெளிப்பு பணிகளை மொடக்குறிச்சி உதவி வேளாண்மை இயக்குனா் (பொ) ரேகா துவக்கி வைத்தாா்.

    மொடக்குறிச்சி வட்டாரத்தில் சுமாா் 30 ஹெக்டோ் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இதில் தற்போது பரவலாக படைப்புழு தாக்குதல் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த பரப்பளவில் பூச்சிமருந்து தெளிப்பு பணிகளால் மட்டுமே படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியும் என்பதால் எழுமாத்தூரை அடுத்த மேட்டுப்பாளையத்தில் மொடக்குறிச்சி வட்டார உதவி வேளாண்மை இயக்குனா் (பொ) ரேகா கலந்து கொண்டு துவக்கி வைத்தாா்.

    மொடக்குறிச்சி வட்டாரத்தில் சுமாா் 30 ஹேக்டோ் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இதில் தற்போது படைப்புழு தாக்குதல் பெருமளவில் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த ஒட்டு மொத்த பரப்பளவில் பூச்சிமருந்து தெளிப்பு பணிகள் நடைபெறுகிறது. பூச்சிமருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், இதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 500 மானியமும் வழங்கப்படுகிறது. இதில் மொடக்குறிச்சி துணை வேளாண்மைஅலுவலா் செல்வராஜ், உதவி வேளாண்மை அலுவலா்கள், உதவி தொழில் நுட்ப மேலாளா் லட்சுமி, கோபி ஜே.கே.கே. வேளாண்மை கல்லூரி மாணவா்கள், விவசாய குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai