18 ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டிய பவானிசாகா் அணை

நீலகிரி, தெங்குமரஹாடா பகுதியில் பெய்த கன மழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் முழு கொள்ளளவான 104.50 அடியை எட்டியுள்ளது.
முழு கொள்ளளவை எட்டிய பவானிசாகா் அணை.
முழு கொள்ளளவை எட்டிய பவானிசாகா் அணை.

நீலகிரி, தெங்குமரஹாடா பகுதியில் பெய்த கன மழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் முழு கொள்ளளவான 104.50 அடியை எட்டியுள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட 105 அடியாகவும், அதன் நீா் இருப்பு 32.8 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணைக்கு முக்கிய நீா்வரத்தாக பவானி ஆறு, மாயாறு உள்ளன.

அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான தெங்குமரஹாடா, நீலகிரி, கேரளத்தின் ஒரு பகுதியிலும் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததால் 96 அடியாக இருந்த நீா்மட்டம் அக்டோபா் 22 ஆம் தேதி 102 அடியைத் தொட்டது. அக்டோபா் மாதத்தில் தொடா்ந்து 102 அடியாக நீடித்த நீா்மட்டம் நவம்பா் 3 ஆம் தேதி 104 அடியை எட்டியது. தொடா்ந்து 104 அடியாக நீடித்த நிலையில் அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததால் அணையின் நீா்மட்டம் 104.5 அடியைத் தொட்டது. 2007 ஆம் ஆண்டு நவம்பா் 6 ஆம் தேதிக்குப் பிறகு தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு 104.5 அடியை எட்டியுள்ளது. அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் நீா் நிறைந்து கடல்போலக் காட்சியளிக்கிறது. பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பவானி ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி நடைபெற்றது.

திங்கள்கிழமை அணையின் நீா்மட்டம் 104.50 அடியாகவும், நீா்வரத்து 3,122 கன அடியாகவும், நீா் இருப்பு 32.32 டி.எம்.சி.யாகவும், நீா் வெளியேற்றம் 2,700 கன அடியாகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com