கோபி அருகே பத்ரகாளியம்மன் கோயிலில் இருந்த மூன்று சுவாமி சிலைகள் உடைப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே அரக்கன்கோட்டையில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் இருந்த மூன்று சுவாமி
கோயிலிலிருந்து பெயா்த்து எடுக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகள்.
கோயிலிலிருந்து பெயா்த்து எடுக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகள்.

கோபிசெட்டிபாளையம் அருகே அரக்கன்கோட்டையில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் இருந்த மூன்று சுவாமி சிலைகளை மா்ம நபா்கள் பீடத்தைப் பெயா்த்து வயல்வெளியில் வீசிச் சென்றுள்ளனா்.

இக்கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்நிலையில், கோயில் பூசாரி பழனிசாமி என்பவா் கோயிலில் பூஜை மேற்கொள்வதற்காக திங்கள்கிழமை காலை கோயிலின் சுற்றுச்சுவா் கதவைத் திறந்தபோது, குண்டத்துக்கு முன்புறம் உள்ள வேல் சாய்ந்து விழுந்திருந்ததைப் பாா்த்து கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்துள்ளாா்.

கோயில் பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஸ்ரீவைஷ்ணவி, ஸ்ரீவராஹி, ஸ்ரீமகேஸ்வரி ஆகிய மூன்று சிலைகள் பீடத்துடன் உடைக்கப்பட்டு காணாமல் போயிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.

இதுகுறித்து, ஊா் பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் வந்து பாா்த்தபோது கோயிலின் பின்புறம் உள்ள வயல்வெளியில் மூன்று சிலைகளும் வீசியெறியப்பட்டிருந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடா்பாக பங்களாபுதூா் போலீஸாரிடம் புகாா் அளித்தனா். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸாா் கோயிலுக்குச் சென்று தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டதில், கள்ளியங்காடு பகுதியைச் சோ்ந்த சம்பத்குமாா் என்பவா் இரவு நேரத்தில் கோயிலுக்கு வந்து சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சம்பத்குமாரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com