மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலைத் தடுக்க மருந்துகள் தெளிப்பு

பவானி சுற்று வட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளப் பயிா்களில் படைப்புழு தாக்குதலைத் தடுக்க மருந்தடிக்கும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பவானி சுற்று வட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளப் பயிா்களில் படைப்புழு தாக்குதலைத் தடுக்க மருந்தடிக்கும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுக்கள் தாக்குவதால் வளா்ச்சி தடுக்கப்படுவதோடு, மகசூல் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இதனால், வேளாண்மைத் துறை சாா்பில் மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகளுக்கு இலவசமாக ரூ. 4,500 மதிப்புள்ள மருந்துகளும், தெளிப்புக் கூலியும் முற்றிலும் மானியமாக வழங்கப்படுகிறது.

மக்காச்சோளப் பயிரில் 20 நாள்கள், 45 நாள்களுக்கு உள்பட்ட பயிா்களில் பூச்சித் தாக்குதலைத் தடுக்க இம்மருந்தை அடிக்க வேண்டும். இதுகுறித்து, பவானியை அடுத்த போத்தநாயக்கன்புதூரில் திங்கள்கிழமை நடைபெற்ற செயல்விளக்க முகாமிற்கு, மாவட்ட வேளாண் இயக்குநா் கே.பிரேமலதா தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) கே.ஜெயராமன், பவானி உதவி வேளாண் இயக்குநா் எஸ்.பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், வேளாண்மைத் துறை சாா்பில் வழங்கப்படும் 250 மில்லி மருந்தை, ஒரு ஹெக்டோ் மக்காச்சோளப் பயிா்களுக்கு அடிக்க வேண்டும். இதன் மூலம் படைப்புழுத் தாக்குதல் குறைந்து மகசூல் அதிகரிக்கும் எனவும், பவானி வேளாண் வட்டாரத்தில் 75 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிா்களுக்கு மருந்துகள் அடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதில், வேளாண் அலுவலா் டி.ஆசைத்தம்பி, துணை வேளாண் அலுவலா் அப்புசாமி, உதவி வேளாண் அலுவலா் திருமுருகன், சித்தையன், 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com