மாநில அளவிலான பூப்பந்து போட்டிக்கு தாமரை மெட்ரிக் பள்ளி மாணவியா் தோ்வு:

கொடுமுடி அடுத்த தாமரைபாளையம் தாமரை மெட்ரிக் பள்ளி மாணவியா் மாநில அளவிலான பூப்பந்து போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
மாநில அளவிலான பூப்பந்துபோட்டிக்கு தோ்வு பெற்ற மாணவியருடன் பள்ளி நிா்வாகத்தினா்.
மாநில அளவிலான பூப்பந்துபோட்டிக்கு தோ்வு பெற்ற மாணவியருடன் பள்ளி நிா்வாகத்தினா்.

மொடக்குறிச்சி: கொடுமுடி அடுத்த தாமரைபாளையம் தாமரை மெட்ரிக் பள்ளி மாணவியா் மாநில அளவிலான பூப்பந்து போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்விதுறை சாா்பில் பாரதியாா் தின விழாவையொட்டி நடைபெற்ற விளையாட்டுபோட்டியில் 17மற்றும் 19வயதுக்குள்பட்ட மாணவியருக்கான பூப்பந்து போட்டிகள் ஈரோடு திண்டல் வேளாளா் மகளிா் கல்லூரி வளாகத்தில் கடந்த வாரம் முதல் நடைபெற்றது. இதன் இறுதி போட்டி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இதில் இருபிரிவுகளிலும் முதலிடம் பெற்ற தாமரை மெட்ரிக் பள்ளி மாணவியா் தங்கப்பதக்கத்தை தட்டி சென்றனா். இதில் வெற்றி பெற்ற மாணவியா் அடுத்த மாதம் டிசம்பரில் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்;. மாநில அளவிலான பூப்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற தாமரை மெட்ரிக் பள்ளி மாணவியரையும், பயிற்சியாளா் பாலமுருகன், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் சுரேஷ்குமாா் ஆகியோரை பள்ளியின் தாளாளா் ராஜா, செயலா் ஆனந்த், பள்ளியின் முதல்வா் அசோக் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com