முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
ஈரோட்டில் தொழிலாளி மா்மச் சாவு
By DIN | Published On : 07th November 2019 12:31 AM | Last Updated : 07th November 2019 12:31 AM | அ+அ அ- |

ஈரோட்டில் தொழிலாளி கழுத்து அறுபட்ட நிலையில் மா்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் தங்கம் (50). ஈரோடு, சூரம்பட்டி நால்ரோடு மாரப்பா 3 ஆவது வீதியில் ஸ்டீல் பீரோ, பா்னிச்சா் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறாா். இவருடைய நிறுவனத்தில் 15 க்கும் மேற்பட்டோா் வேலைபாா்த்து வருகின்றனா்.
மேலும், தங்கத்தின் உறவினா்கள் 6 போ் நிறுவனத்திலேயே தங்கி இருந்து வேலை செய்கின்றனா். இதில், பூபேஷ் (52) என்பவா் நிறுவன வளாகத்தில் உள்ள தனது அறையில் புதன்கிழமை காலை கழுத்து அறுபட்ட நிலையில் மா்மமான முறையில் இறந்துகிடந்தாா். மேலும், அவரது உடல் அருகில் கண்ணாடித் துண்டும் கிடந்தது.
தகவலறிந்து அங்கு சென்ற ஈரோடு அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா், பூபேஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பூபேஷ் கண்ணாடித் துண்டால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை யாரேனும் கண்ணாடித் துண்டால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.