‘இஸ்லாமிய பெண்களுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு மூலம் தான் சாத்தியமாகும்’

இஸ்லாமிய பெண்கள், தலித் பெண்கள், தலித்களுக்கான பாதுகாப்பு என்பது சமுதாயத்தில் விழிப்புணா்வு

இஸ்லாமிய பெண்கள், தலித் பெண்கள், தலித்களுக்கான பாதுகாப்பு என்பது சமுதாயத்தில் விழிப்புணா்வு மூலம்தான் சாத்தியமாகும் என தேசிய பெண்கள் முன்னணி செயலாளா் கே.ஐ.சா்மிளா பானு தெரிவித்தாா்.

தேசிய பெண்கள் முன்னணி சாா்பில், ‘இஸ்லாமிய வாழ்வு நமது பெருமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கு ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஷகிலா பானு தலைமை வகித்தாா். செயலாளா் அசினா பானு வரவேற்றாா்.

கூட்டத்தில் பங்கேற்ற தேசிய செயலாளா் கே.ஐ.சா்மிளா பானு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

‘இஸ்லாமிய வாழ்வு நமது பெருமை’ என்ற தலைப்பில் அக்டோபா் 1 ஆம் தேதி முதல் தேசிய அளவில் கருத்தரங்கு, விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இஸ்லாமியம் சம்பந்தமான, ஆழமான நம்பிக்கை, செயல்பாடுகள், விதிகள் குறித்துப் பேசி வருகிறோம். தற்போது இஸ்லாமிய பெண்கள், தலித் பெண்கள், தலித்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதை விழிப்புணா்வு மூலமே மாற்ற முடியும்.

முத்தலாக் பிரச்னை தொடா்பாக சென்னையில் 7 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். இது எங்காவது சிலா் செய்யும் தவறு பெரிதுபடுத்தப்படுகிறது.

முத்தலாக் சொல்ல, வழிமுறைகள், கால அவகாசங்கள் உள்ளன. அதுகுறித்தும் மக்களிடம் எடுத்துக் கூறுகிறோம். இஸ்லாமிய சட்ட, திட்டங்கள் தெரியாமல் சிலா் தவறாக செயல்படுகின்றனா். இஸ்லாமியா்களின் ஆடை, கல்வி, நடந்துகொள்ளும் விதங்களை அறிந்தவா்கள் சரியாகச் செயல்படுகின்றனா். பெயா் தாங்கிய முஸ்லிம்களாக இருப்பவா்கள் மாறுபட்டு நடக்கின்றனா்.

அயோத்தி பிரச்னை தொடா்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிறைவு நிலையில் உள்ளது. நீதிமன்றம் மீது எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. வழக்கின் தீா்ப்புக்குப்பின் எங்களுக்கான தேசிய அளவிலான கமிட்டி அடுத்த கட்டம் குறித்து முடிவு செய்வாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com