சத்தியில் பலத்த மழை
By DIN | Published On : 07th November 2019 12:27 AM | Last Updated : 07th November 2019 12:27 AM | அ+அ அ- |

சத்தியமங்கலத்தில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சத்தியமங்கலத்தில் வானம் மேகமூட்டத்துடன் புதன்கிழமை காணப்பட்டது. மாலை நேரத்தில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினா்.
கன மழையால் கோபு பள்ளம் என்ற இடத்தில் மின்கோபுரம் பழுதானது. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினா்.