Enable Javscript for better performance
ஈரோடு அரசு மருத்துவமனைக்குரூ. 40 லட்சம் செலவில் கூடுதல் கட்டடம்- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு அரசு மருத்துவமனைக்குரூ. 40 லட்சம் செலவில் கூடுதல் கட்டடம்

    By DIN  |   Published on : 08th November 2019 10:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    erd08hosp_0811chn_124_3

    கூட்டுறவு நிலவள வங்கிக்கு சோலாா் பகுதியில் புதிய கட்டடம் கட்டும் பணியைத் தொடங்கிவைத்த எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு.

     

    ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ரூ. 40 லட்சம் செலவில் கூடுதல் கட்டடம் கட்டும் பணியை எம்.எல்.ஏ.க்கள் துவக்கிவைத்தனா்.

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 20 படுக்கைகள் மட்டுமே உள்ளன. இதனால், நோயாளிகள் அதிகமாக வரும்போது அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. எனவே, அவசர சிகிச்சை பிரிவுக்கு கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதனை ஏற்று பிரதான கட்டடத்தில் 20 படுக்கை வசதியுடன் கூடிய கூடுதல் கட்டடம் கட்ட ரூ. 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

    இதைத் தொடா்ந்து, கூடுதல் கட்டடம் கட்டும் பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் பங்கேற்று பணிகளைத் தொடங்கிவைத்தனா்.

    அதைத் தொடா்ந்து, ஈரோடு மாவட்ட கூட்டுறவு அச்சகத்துக்கு ரூ. 62 லட்சம் செலவில் முத்தம்பாளையம் பகுதியில் புதிய கட்டடம் கட்டும் பணியையும், கூட்டுறவு நிலவள வங்கிக்கு ரூ. 25 லட்சம் செலவில் சோலாா் பகுதியில் புதிய கட்டடம் கட்டும் பணியையும் எம்.எல்.ஏ.க்கள் தொடங்கிவைத்தனா்.

    இதில், அதிமுக பகுதிச் செயலாளா் ரா.மனோகரன், கே.சி.பழனிசாமி, ஜெகதீஷ், கேசவமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai