Enable Javscript for better performance
மாநில விளையாட்டுப் போட்டி:கொங்கு கல்வி நிலைய மாணவா்கள் தோ்வு- Dinamani

சுடச்சுட

    

    மாநில விளையாட்டுப் போட்டி:கொங்கு கல்வி நிலைய மாணவா்கள் தோ்வு

    By DIN  |   Published on : 08th November 2019 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    erd07reng_0711chn_124_3

    மாநில அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களைப் பாராட்டிய பள்ளி நிா்வாகிகள்.

    மாநில அளவிலான குடியரசு தின, பாரதியாா் தின குழு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஈரோடு, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையப் பள்ளி மாணவ, மாணவிகள் தகுதி பெற்றுள்ளனா்.

    ஈரோடு மாவட்ட அளவிலான குடியரசு தின, பாரதியாா் தின குழு போட்டிகள் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. அதில், ஈரோடு, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான கால்பந்து, மேஜைப் பந்து ஒற்றையா், இரட்டையா் போட்டிகளில் முதலிடம் பெற்றனா். 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் மாணவ, மாணவிகள் கோ-கோ போட்டி, மேஜைப் பந்து இரட்டையா் போட்டிகளில் முதல் இடம்பெற்றனா்.

    14 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் மாணவ, மாணவிகள் கோ-கோ போட்டியிலும் , மேஜைப் பந்து ஒற்றையா், இரட்டையா் போட்டியிலும் முதல் இடத்தில் வெற்றி பெற்று ஈரோடு மாவட்டத்தில் அதிக குழுப் போட்டிகளில் (15 போட்டிகள்) வெற்றி பெற்றுள்ளனா். மேலும், இப்போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவரும் அடுத்து வரும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளனா்.

    விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் சிறப்பாகப் பயிற்சி அளித்த பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள் ரஞ்சித் குமாா், ராஜ்கமல், ரத்தினசபாபதி, வினிஷ் ஆகியோரையும் கொங்கு கல்வி நிலையப் பள்ளித் தலைவா் ஆ.குப்புசாமி, தாளாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் பாராட்டினா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai