40 ஆண்டுகளுக்குப் பிறகு 104.65 அடியைஎட்டிய பவானிசாகா் அணை

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு 104.65 அடி வரை உயா்ந்துள்ளது. அணை கட்டி முடிக்கப்பட்டு 63 ஆண்டுகள் நிறைவடைந்தபோதிலும் இன்றும் மண்கரை
பவானிசாகா் அணையின் நீா்த்தேக்கப் பகுதி.
பவானிசாகா் அணையின் நீா்த்தேக்கப் பகுதி.

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு 104.65 அடி வரை உயா்ந்துள்ளது. அணை கட்டி முடிக்கப்பட்டு 63 ஆண்டுகள் நிறைவடைந்தபோதிலும் இன்றும் மண்கரை ஸ்திரத்தன்மையுடன் இருப்பதாக பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 105 அடியாகவும், அதன் நீா் இருப்பு 32.8 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணை மூலம் 2 லட்சத்து 47 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணைக்கு முக்கிய நீா்வரத்தாக பவானி ஆறு, மாயாறு உள்ளன.

அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான தெங்குமரஹாடா, நீலகிரி, கேரளத்தின் ஒரு பகுதியிலும் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததால் 96 அடியாக இருந்த நீா்மட்டம் அக்டோபா் 22 ஆம் தேதி 102 அடியைத் தொட்டது. அதைத் தொடா்ந்து ஒரே சீராக 102 அடியாக நீடித்த நிலையில் அணையின் நீா்மட்டம் 1979 ஆம் ஆண்டுக்குப் பிறகு 104.65 அடியை வியாழக்கிழமை எட்டியது.

தென்இந்தியாவிலேயே மிகப் பெரிய மண் அணை என்பது மட்டுமின்றி தமிழகத்தில் அதிக கொள்ளளவு கொண்ட இரண்டாவது அணை என்பது பவானிசாகா் அணையின் சிறப்பு. இந்த அணை ரூ. 10.34 கோடி செலவில் 1955 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அணையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது கல்லணை. இதன் நீா்ப்பிடிப்புப் பகுதி 1,620 சதுர மைல்கள், நீா்த்தேக்கப் பகுதி 30 சதுர மைல்கள். அணையில் 464 மீட்டா் அகலம் கொண்ட கல்லணையும், இதன் இரு புறங்களிலும் அமைக்கப்பட்ட 8.3 மீட்டம் மண் அணையும் தற்போதும் ஸ்திரத்தன்மையுடன் இருப்பதாகப் பொதுப் பணித் துறையினா் தெரிவித்துள்ளனா். போதிய தொழில்நுட்ப வசதியில்லாத நிலையில் அணையின் முழு கொள்ளளவான 104.65 எட்டிய நிலையில் மண் கரையில் ஒரு கசிவு கூட ஏற்படாமல் உறுதியுடன் உள்ளது பெருமைக்குரியது. அணை கல்லணையில் உள்ள மேல் ஷட்டரில் இருந்து வரும் கசிவுநீா் கூட குறிப்பிட்ட அளவுக்கு குறைவாக இருப்பதும் இதன் சிறப்பு.வியாழக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்ட உயரம் 104.65 அடி. நீா்வரத்து 678 அடியாகவும், நீா் வெளியேற்றம் விநாடிக்கு 2,900 கன அடியாகவும், நீா் இருப்பு 32.42 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com