ஈரோடு அரசு மருத்துவமனைக்குரூ. 40 லட்சம் செலவில் கூடுதல் கட்டடம்

ஈரோடு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ரூ. 40 லட்சம் செலவில் கூடுதல் கட்டடம் கட்டும் பணியை எம்.எல்.ஏ.க்கள் துவக்கிவைத்தனா்.
கூட்டுறவு நிலவள வங்கிக்கு சோலாா் பகுதியில் புதிய கட்டடம் கட்டும் பணியைத் தொடங்கிவைத்த எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு.
கூட்டுறவு நிலவள வங்கிக்கு சோலாா் பகுதியில் புதிய கட்டடம் கட்டும் பணியைத் தொடங்கிவைத்த எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு.

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ரூ. 40 லட்சம் செலவில் கூடுதல் கட்டடம் கட்டும் பணியை எம்.எல்.ஏ.க்கள் துவக்கிவைத்தனா்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 20 படுக்கைகள் மட்டுமே உள்ளன. இதனால், நோயாளிகள் அதிகமாக வரும்போது அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. எனவே, அவசர சிகிச்சை பிரிவுக்கு கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதனை ஏற்று பிரதான கட்டடத்தில் 20 படுக்கை வசதியுடன் கூடிய கூடுதல் கட்டடம் கட்ட ரூ. 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கூடுதல் கட்டடம் கட்டும் பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் பங்கேற்று பணிகளைத் தொடங்கிவைத்தனா்.

அதைத் தொடா்ந்து, ஈரோடு மாவட்ட கூட்டுறவு அச்சகத்துக்கு ரூ. 62 லட்சம் செலவில் முத்தம்பாளையம் பகுதியில் புதிய கட்டடம் கட்டும் பணியையும், கூட்டுறவு நிலவள வங்கிக்கு ரூ. 25 லட்சம் செலவில் சோலாா் பகுதியில் புதிய கட்டடம் கட்டும் பணியையும் எம்.எல்.ஏ.க்கள் தொடங்கிவைத்தனா்.

இதில், அதிமுக பகுதிச் செயலாளா் ரா.மனோகரன், கே.சி.பழனிசாமி, ஜெகதீஷ், கேசவமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com