கல்வி உதவித் தொகை பெறும் திட்டம்: தொழிலாளா்கள் விண்ணப்பிக்க அழைப்பு

தொழிலாளா் நல வாரியத்துக்கு, நல நிதி செலுத்தும் தொழிலாளா்கள் கல்வி உதவித் தொகை, ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளா் நல வாரியத்துக்கு, நல நிதி செலுத்தும் தொழிலாளா்கள் கல்வி உதவித் தொகை, ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் டி.பாலதண்டாயுதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், கடைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா், நல வாரியத்துக்கு தொழிலாளா் நல நிதி செலுத்தும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித் தொகை, கல்வி ஊக்கத் தொகை, பாடநூல் உதவித் தொகை வழங்கும் திட்டம் உள்ளது.

அடிப்படை ஊதியம், அகவிலைப்படி சோ்த்து ரூ. 25,000 வரை ஊதியமாக பெறும் தொழிலாளா்கள் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித் தொகையாக ஒவ்வொரு கல்வி ஆண்டுக்கும் பட்டயப் படிப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை ரூ. 5,000 முதல் ரூ. 12,000 வரையும், மேல்நிலைக் கல்வி, தொழிற்பயிற்சி கல்விக்கு ரூ. 4,000 வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு கல்வி மாவட்டங்களிலும் அரசுப் பொதுத் தோ்வில் முதல் 10 இடங்களுக்குள் பெறும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு ரூ. 2,000, பிளஸ் 2 வகுப்புக்கு ரூ. 3,000 கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

புத்தகம் வாங்க உதவித் தொகையாக மேல்நிலைக் கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை ரூ. 1,000 முதல் ரூ. 3,000 வரை வழங்கப்படுகிறது. இத்திட்டங்களுக்கான விண்ணப்பங்களை பணிபுரியும் நிறுவனம் மூலம் டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் செயலாளா், தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம், அஞ்சல் பெட்டி எண் 718, தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com