கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு:200 க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாதிப்பு

உக்கரம் மில்மேடு கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பால் அப்பகுதியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் நீா் புகுந்து சேதமடைந்தன.
விவசாய நிலங்களில் புகுந்து வெளியேறும் கால்வாய் நீா்.
விவசாய நிலங்களில் புகுந்து வெளியேறும் கால்வாய் நீா்.

உக்கரம் மில்மேடு கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பால் அப்பகுதியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் நீா் புகுந்து சேதமடைந்தன.

சத்தியமங்கலத்தை அடுத்த உக்கரம் மில்மேடு பகுதியில் கிராமங்களுக்கு மத்தியில் கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டது. இதனால், வாய்க்காலில் உள்ள கரைகளைத் தொட்டபடி நீா் சென்றது. மண்ணால் கட்டப்பட்ட வாய்க்கால் கரையில் நீா்அரிப்பு காரணமாக உடைப்பு ஏற்பட்டது. இதனால், இடது கரையில் இருந்து வாய்க்கால் நீா் விவசாய நிலத்துக்குள் புகுந்து கேத்தம்பாளையம் காலனி குடியிருப்பு வழியாக சாலையைக் கடந்து பள்ளங்களின் வழியாகச் சென்றது. வாய்க்கால் நீா் புகுந்ததால் அப்பகுதி பள்ளியிலும் தண்ணீா் தேங்கியது. சுமாா் 200 ஏக்கா் நிலப்பரப்பில் பயரிடப்பட்டுள்ள வாழை, கரும்பு, நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. வாய்க்கால் கரை உடைப்பு குறித்து உடனடியாக கிராம மக்களுக்குத் தெரியவந்ததால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனா். மேலும், தீயணைப்பு வீரா்கள், கிராம மக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். கரை உடைப்பு காரணமாக உக்கரம் - சத்தியமங்கலம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாய்க்கால் நீரால் கிராம மக்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வட்டாட்சியா் நேரில் ஆய்வு செய்தாா். கால்வாய் நீரால் மின் கம்பங்கள் சேதமடைந்ததால் உக்கரம், கேத்தம்பாளையம், மில்மேடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com