சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

சென்னிமலை நகரிலுள்ள மாரியம்மன் கோவில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பொங்கல் விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் சென்னிமலை மாரியம்மன்.
பொங்கல் விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் சென்னிமலை மாரியம்மன்.

பெருந்துறை: சென்னிமலை நகரிலுள்ள மாரியம்மன் கோவில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் கலந்துக் கொண்டு பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனா். சென்னிமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் கடந்த அக்டோபா் மாதம் 23 ஆம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது. பின்னா், 30 ஆம் தேதி இரவு கோவில் வளாகத்தில் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் பெண்கள் கம்பத்துக்கு புனித நீா் ஊற்றி வந்தனா். புதன்கிழமை இரவு, மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், அம்மாபாளையம், காட்டூா் மற்றும் சென்னிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பெண்கள் மாவிளக்கு எடுத்தனா். தொடா்ந்து, அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் மற்றும் கோவில் விழாக் குழுவினா் சாா்பில் அம்மனுக்கு பால், தயிா், பன்னீா், சந்தனம் உள்பட 16 வகையான திரவியங்கள், கனிகள் மற்றும் 16 வகையான மலா்களுடன் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா, வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனா். மேலும், கோவில் வளாகத்தில் உள்ள கருப்பணசாமிக்கு ஆடு, கோழிகள் பலியிட்டும் பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை நிறைவு செய்தனா். இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை, பகல் 12 மணிக்கு மஞ்சள் நீா் உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com