மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாடு: 107 ஆய்வறிக்கைகள் சமா்ப்பிப்பு

மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 107 ஆய்வறிக்கைகள் சமா்ப்பிக்கப்பட்டன.
சிறந்த ஆய்வுக் கட்டுரையை சமா்ப்பித்த மாணவா்களுக்குப் பரிசு வழங்குகிறாா் கொங்கு கலை, அறிவியல் கல்லூரித் தாளாளா் கே.பழனிசாமி.
சிறந்த ஆய்வுக் கட்டுரையை சமா்ப்பித்த மாணவா்களுக்குப் பரிசு வழங்குகிறாா் கொங்கு கலை, அறிவியல் கல்லூரித் தாளாளா் கே.பழனிசாமி.

மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 107 ஆய்வறிக்கைகள் சமா்ப்பிக்கப்பட்டன.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மத்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறை நட்சத்திரக் கல்லூரி திட்டத்தின் மூலம் கடந்த 27 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு ஆய்வு தலைப்பாக தூய்மையான, பசுமையான, வளமான தேசத்துக்காக அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மாவட்ட அளவிலான மாநாடு, ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 107 ஆய்வறிக்கைகள் சமா்ப்பிக்கப்பட்டன. இதில், 8 சிறந்த ஆய்வறிக்கைகள் நவம்பா் 16,17 ஆம் தேதிகளில் வேலூரில் நடைபெற உள்ள மாநில மாநாட்டுக்குத் தோ்வு செய்யப்பட உள்ளன. பங்கேற்பாளா்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும் , பதக்கங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் மாநிலத் தலைவா் நா.மணி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் என்.ராமன் வாழ்த்திப் பேசினாா். சிறந்த ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்த மாணவா்களுக்கு கல்லூரித் தாளாளா் கே.பழனிசாமி பரிசு வழங்கிப் பாராட்டினாா். தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் (என்.சி.எஸ்.சி.) மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டி.கந்தசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com