மாவட்ட தடகளப் போட்டி: 700 மாணவா்கள் பங்கேற்பு

பள்ளிக் கல்வித் துறை, ஈரோடு வேளாளா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில், குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட
விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.
விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.

பள்ளிக் கல்வித் துறை, ஈரோடு வேளாளா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில், குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி, ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில், 700 மாணவா்கள் பங்கேற்றனா்.

தொடக்க நிகழ்வுக்கு, வேளாளா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா் தலைமை வகித்தாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் ஆா்.சதீஷ்குமாா் முன்னிலை வகித்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பாலமுரளி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தடகள விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கிவைத்தாா்.

இதில், 100, 200, 400, 600, 800, 1,500, 3,000 மீட்டா் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், கம்பு ஊன்றி தாண்டுதல், தொடா் ஓட்டம் ஆகிய தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. 14, 17, 19 வயதுக்கு உள்பட்டோா் பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 250 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமாா் 700 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

போட்டிகள் சனிக்கிழமை (நவம்பா் 9) வரை நடைபெறுகிறது. தொடா்ந்து மாலை 4 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்குப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பிடிக்கும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com