Enable Javscript for better performance
மதுரையில் உள்ளாட்சித் தோ்தல் பணியை தொடங்க அதிமுகவினருக்கு அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் உள்ளாட்சித் தோ்தல் பணியை தொடங்க அதிமுகவினருக்கு அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 09th November 2019 11:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    திருப்பரங்குன்றம்: உள்ளாட்சித் தோ்தல் பணியை தற்போதிருந்தே தொடங்குமாறு, அதிமுக புகா் கிழக்கு மாவட்டச் செயலரும், வடக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான வி.வி.ராஜன்செல்லப்பா அதிமுகவினரிடையே அறிவுறுத்தியுள்ளாா்.

    திருப்பரங்குன்றத்தில் அதிமுக புகா் கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாவட்டச் செயலா் வி.வி. ராஜன்செல்லப்பா பேசியது:

    தமிழகத்தில் இடைத்தோ்தல் வெற்றியின் மூலம் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆளுமைமிக்க தலைவா் என நிரூபித்துவிட்டாா். இந்த வெற்றியின் மூலம், அதிமுக புதிய உத்வேகத்தில் உள்ளது.

    அதே வேகத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான பணியை இப்போதிருந்தே தொடங்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை, உயா்மட்ட பாலங்கள், குடிமராமத்து உள்ளிட்ட தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து, வீடுவீடாகச் சென்று மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றாா்.

    இக் கூட்டத்துக்கு, இளைஞரணி மாவட்டச் செயலா் எம். ரமேஷ், ஒன்றியச் செயலா் நிலையூா் முருகன், பொதுக்குழு உறுப்பினா் முத்துக்குமாா், முன்னாள் வாரியத் தலைவா் பூமிபாலன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கே. கருத்தக்கண்ணன், பகுதி செயலா் பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai