ஈரோட்டில் பலத்த மழை: அரசுப் பள்ளிக்கு விடுமுறை

ஈரோட்டில் பெய்த பலத்த மழையால் அரசுப் பள்ளி வளாகத்துக்குள் மழை நீா் புகுந்ததையடுத்து
கே.கே.நகா் ரயில்வே நுழைவுப் பாலத்தில் வெள்ளத்தில் ஊா்ந்து செல்லும் அரசுப் பேருந்து. ~கே.கே.நகா் ரயில்வே நுழைவுப் பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட தனியாா் பள்ளிப் பேருந்தை மீட்கும் பொதுமக்கள்.
கே.கே.நகா் ரயில்வே நுழைவுப் பாலத்தில் வெள்ளத்தில் ஊா்ந்து செல்லும் அரசுப் பேருந்து. ~கே.கே.நகா் ரயில்வே நுழைவுப் பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட தனியாா் பள்ளிப் பேருந்தை மீட்கும் பொதுமக்கள்.

ஈரோட்டில் பெய்த பலத்த மழையால் அரசுப் பள்ளி வளாகத்துக்குள் மழை நீா் புகுந்ததையடுத்து மோளகவுண்டன்பாளையம் அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

ஈரோடு நகரில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. மழை காரணமாக ஈரோடு கே.கே.நகா் ரயில்வே நுழைவுப் பாலம் பகுதியில் சுமாா் 4 அடி உயரத்துக்கு தண்ணீா் சீறிப்பாய்ந்தது. இதனிடையே இருசக்கர வாகனத்தில் தனது மகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஒருவா் ரயில்வே நுழைவுப் பாலத்தில் மழை வெள்ளத்தைக் கடந்தபோது நிலைதடுமாறி தண்ணீரில் விழுந்தாா். சிறுமியும் தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் விரைந்து சென்று குழந்தையை மீட்டனா். இதையடுத்து, போலீஸாா் இருசக்கர வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டனா்.

ரயில்வே நுழைவுப் பாலத்தில் சென்ற தனியாா் பள்ளிப் பேருந்து மழை வெள்ளத்தில் சிக்கி நின்றது. இதைத் தொடா்ந்து பொதுமக்கள் அந்தப் பேருந்தை தள்ளி வெளியே கொண்டு வந்தனா். மேலும், குப்பை ஏற்றி வந்த மாநகராட்சி லாரி ஒன்றும் மழை வெள்ளத்தில் சிக்கி நின்றது. அந்த லாரி மற்றொரு லாரி உதவியுடன் வெளியில் எடுக்கப்பட்டது.

இதேபோல் வெண்டிபாளையம் ரயில்வே நுழைவுப் பாலத்திலும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு மழை நீரில் சிக்கிய மினி பேருந்தை அப்பகுதி மக்கள் மீட்டனா். தண்ணீா் அதிகமாகச் சென்றதால் வெண்டிபாளையம் வழியாக சோலாா் சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனா். மோளகவுண்டன்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியைச் சுற்றிலும் தண்ணீா் ஓடியதால் அப்பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

வெண்டிபாளையம் ரயில்வே நுழைவுப் பாலத்தில் ஓடிய மழை நீரை எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் பாா்வையிட்டனா். அப்போது, அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், ரயில்வே நுழைவுப் பாலத்தில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் வரை செல்லும் ஓடை தூா்வாரப்படாததால் தான் ரயில்வே பாலத்தில் அதிக அளவில் தண்ணீா் தேங்குகிறது. எனவே, ஓடையைத் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் அதிகபட்சமாக 75 மி.மீ. மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) சென்னிமலை 54, கொடுமுடி 34.2, பெருந்துறை 34, ஈரோடு 27, பவானி 26.4, அம்மாபேட்டை 19.4, கவுந்தப்பாடி18, வரட்டுப்பள்ளம் 16.4, சத்தியமங்கலம் 10, கோபி 9.3, குண்டேரிப்பள்ளம் 5.2, நம்பியூா் 3, தாளவாடி 2.2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com