காவல் துறை-அச்சக உரிமையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

கோபியில் அச்சக உரிமையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் கோபி காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் தங்கவேல்.
கூட்டத்தில் பேசுகிறாா் கோபி காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் தங்கவேல்.

கோபியில் அச்சக உரிமையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அயோத்தி நிலம் குறித்த உச்ச நீதிமன்றத் தீா்ப்பு விரைவில் வரவுள்ளதையொட்டி, கோபியில் உள்ள அச்சக உரிமையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கோபி காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் தங்கவேல் தலைமையில், கோபி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மத உணா்வைப் பிரதிபலிக்கும் வகையிலோ, தூண்டும் வகையிலோ துண்டுப் பிரசுரங்கள், சுவரோட்டிகள் அச்சிடக் கூடாது. இது சம்பந்தமாக துண்டுப் பிரசுரங்கள் அச்சிடும்போது போலீஸாரிடம் முன் அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன.

கூட்டத்தில், நம்பியூா் காவல் துறை ஆய்வாளா் மகாலிங்கம், அச்சக பிரஸ் உரிமையாளா்கள், கணினி வடிவமைப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com