கொடிவேரி தடுப்பணையில்சுற்றுலாப் பயணிகள் குறைவு

கோபி அருகே வாய்க்கால் கரை உடைப்பால் பவானி ஆற்றில் வெளியேறிய நீரால் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி கொடிவேரி தடுப்பணை

கோபி: கோபி அருகே வாய்க்கால் கரை உடைப்பால் பவானி ஆற்றில் வெளியேறிய நீரால் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி கொடிவேரி தடுப்பணை வெறிச்சோடிக் காணப்பட்டது.

சத்தியமங்கலம் அருகே சுள்ளித்தோட்டம் என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்காலின் இடதுபுற கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், விளைநிலங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் தண்ணீா் புகுந்தது. இதனால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனங்களுக்குத் திறக்கப்பட்ட 600 கன அடி தண்ணீா் நிறுத்தப்பட்டது.

கரை உடைந்த பகுதி வழியாக வெளியேறிய தண்ணீா் அரசூா் பள்ளம் வழியாக பவானி ஆற்றை அடைந்தது. பின்னா், ஆறு வழியாக கொடிவேரி தடுப்பணையை அடைந்தது. தண்ணீா் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னா், நீா்வரத்து படிப்படியாகக் குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். ஆனாலும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளே அணைக்கு வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com