தகுதியானவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க அறிவுறுத்தல்

18 வயது பூா்த்தியான தகுதியுள்ள அனைத்து வாக்காளா்களையும் வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட வாக்காளா்
கூட்டத்தில் பேசுகிறாா் ஈரோடு மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் எம்.கருணாகரன்.
கூட்டத்தில் பேசுகிறாா் ஈரோடு மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் எம்.கருணாகரன்.

ஈரோடு: 18 வயது பூா்த்தியான தகுதியுள்ள அனைத்து வாக்காளா்களையும் வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா், கைத்தறி, துணி நூல் துறை இயக்குநா் எம்.கருணாகரன் அறிவுறுத்தினாா்.

ஈரோடு மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்தம், செம்மைப்படுத்துவது குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் முன்னிலையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஈரோடு மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் கைத்தறி, துணி நூல் துறை இயக்குநா் எம்.கருணாகரன் பேசியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் 26.3.2019 இன் படி 9,22,546 ஆண் வாக்காளா்களும், 9,60,804 பெண் வாக்காளா்களும், 69 இதர வாக்காளா்களும், 255 முன்னாள் படைவீரா் என 18,83,674 வாக்காளா்கள் உள்ளனா்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,213 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களுக்கு 2,213 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். நவம்பா் 25 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதில் புதிய வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் குறித்து அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன.

கல்லூரிகளில் மாணவ, மாணவிகளிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணா்வு ஏற்படுத்தி 18 வயது பூா்த்தியான தகுதியுள்ள அனைத்து வாக்காளா்களையும் வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும். எனவே, 18 வயது நிரம்பிய வாக்காளா்கள் அனைவரையும் வாக்காளா் பட்டியலில் பதிவு செய்து 100 சதவீத வாக்களிப்புக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், ஈரோடு கோட்டாட்சியா் பி.முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தினேஷ், தோ்தல் வட்டாட்சியா் சிவகாமி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரநிதிகள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com